Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நாட்டின் நிலைமை ஆபத்தானது

T

The Leader Desk

அக்டோபர் 5, 2023 • 4:41 PM

நாட்டின் நிலைமை ஆபத்தானது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்டணத்தை 3 ஆவது முறையாகவும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ள சூழ்நிலையால் நாட்டு மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
  • எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (05) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • கடந்த 48 மணி நேரத்தில் 11 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும், அவர்களில் 5 சிறார்களும் உள்ளனர் என்றும், வைத்தியர் விராஜ் பெரேராவின் கருத்துப்படி இந்நாடு போதைப்பொருள் சொர்க்கமாக மாறி Zombie Drugs என்ற புதிய போதைப்பொருளும் நாட்டுக்கு வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
  • ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின் பிரகாரம், 10 இலங்கையர்களில் 6 பேர் ஆபத்தில் உள்ளனர் என்றும், 221 இலட்சத்தில் 123 இலட்சம் பேர் ஆபத்தில் உள்ள வேளையில், அரசாங்கம் எந்தப் பிரச்சினையும் இல்லாது போல் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

கட்டணத்தை 3 ஆவது முறையாகவும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ள சூழ்நிலையால் நாட்டு மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை விரிவாக்குவதற்கு பதிலாக பொருளாதாரத்தை சுருக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பதால் மக்களின் வருமான மூலங்கள் குறைந்துள்ளன என்றும், இதனால் மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ள தருணத்தில் எரிவாயு, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (05) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பணவீக்கம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும், நாட்டில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 12 ஆண்டுகளில் 3765 யானைகள் இறந்துள்ளன என்றும், கடந்த 9 மாதங்களில் 291 யானைகள் உயிரிழந்துள்ளன என்றும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 20 யானைகள் உயிரிழந்துள்ளன என்றும், இது வனவிலங்கு சார் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அழிவு என்றும், வன ஜீவராசிகள் அமைச்சின் வாடகை கூட செலுத்தப்படாத சூழலில் லிப்ட் கூட செயலிழந்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த 48 மணி நேரத்தில் 11 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும், அவர்களில் 5 சிறார்களும் உள்ளனர் என்றும், வைத்தியர் விராஜ் பெரேராவின் கருத்துப்படி இந்நாடு போதைப்பொருள் சொர்க்கமாக மாறி Zombie Drugs என்ற புதிய போதைப்பொருளும் நாட்டுக்கு வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின் பிரகாரம், 10 இலங்கையர்களில் 6 பேர் ஆபத்தில் உள்ளனர் என்றும், 221 இலட்சத்தில் 123 இலட்சம் பேர் ஆபத்தில் உள்ள வேளையில், அரசாங்கம் எந்தப் பிரச்சினையும் இல்லாது போல் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமைச்சரவை என்ற ரீதியில் மனசாட்சிக்கு உடன்பட்டா இந்த எரிவாயு விலையை அதிகரித்தீர் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் பக்கம் நின்று செயற்படுமாறும் கோரிக்கை விடுத்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாட்டின் நிலைமை ஆபத்தானது | Tamil Leader | We Lead the Nation