Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

புகையிரதத்தில் முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து!

T

The Leader Desk

அக்டோபர் 3, 2023 • 11:27 AM

புகையிரதத்தில் முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாப்புக் கடமையில்லாத நிலையில் இடம்பெறும் விபத்துக்கள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
  • இன்று பி.ப 12.15 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே முச்சக்கர வண்டி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
  • சம்பவத்தில் ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரஹமான் றமீஸ் என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
எழுத்து அளவு:

பாதுகாப்புக் கடமையில்லாத நிலையில் இடம்பெறும் விபத்துக்கள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்று பி.ப 12.15 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே  முச்சக்கர வண்டி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் மிச்நகர் பகுதியில் ரயில் கடவையில் வீதியை கடக்க முயன்ற போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய  03 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரஹமான் றமீஸ் என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டு தற்போது பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மோற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அந்தப் பிரதேச மக்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த  பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் பல விபத்துக்கள் இடம் பெற்று  பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும்   இதற்கு சரியான பாதுகாப்பினை அரசாங்கமும் அரசியல்வாதியும் மேற்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

புகையிரதத்தில் முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து! | Tamil Leader | We Lead the Nation