Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நீதிபதி சரவணராஜா இராஜினாமா - ரிஷாட் வௌியிட்ட அறிக்கை!

T

The Leader Desk

அக்டோபர் 3, 2023 • 3:15 AM

நீதிபதி சரவணராஜா இராஜினாமா - ரிஷாட் வௌியிட்ட அறிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ள இழுபறிகள், வங்குரோத்துக்குச் சென்றுள்ள நிதி நிலைமைகளால் நாட்டின் மீது சர்வதேசத்தின் கவனம் குவிந்துள்ள சூழலிது.
  • பாராளுமன்ற நிலையியற் கட்டளையையும் மீறி பாராளுமன்ற உறுப்பினர் சிலர் தெரிவித்த கருத்துக்கள், நீதித்துறையை பாரபட்சத்துக்குள் புகுத்துவதற்கான முயற்சியா?
  • இவ்வாறுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் கடன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலும் சர்வதேசம் திருப்தியில் இல்லை.
எழுத்து அளவு:

ஏற்படலாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்து அவர் இன்று (2) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“மேலாதிக்கச் சிந்தனையில் சில அரசியல்வாதிகள் இன்னும் செயற்படுவதையே நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் மீதான அழுத்தங்கள் புலப்படுத்துகின்றன.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ள இழுபறிகள், வங்குரோத்துக்குச்  சென்றுள்ள நிதி நிலைமைகளால் நாட்டின் மீது சர்வதேசத்தின் கவனம் குவிந்துள்ள சூழலிது. இவ்வாறுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் கடன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலும் சர்வதேசம் திருப்தியில் இல்லை. பல்வகையான பொறிக்குள் நாடுள்ளபோது அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துவதனூடாகவே சர்வதேசத்தின் அபிமானத்தை வெல்ல முடியும்.

ஆணைக்குழுக்களை நிறுவுதல், அரசியலமைப்பில் திருத்தம் செய்தல் என்பவை  கண்துடைப்புக்காகவா செய்யப்படுகிறது என்ற சந்தேகங்களைக் கிளறும் வகையிலே சிலரின் செயற்பாடுகள் உள்ளன. பாராளுமன்ற நிலையியற் கட்டளையையும் மீறி பாராளுமன்ற உறுப்பினர் சிலர் தெரிவித்த கருத்துக்கள், நீதித்துறையை பாரபட்சத்துக்குள் புகுத்துவதற்கான முயற்சியா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

அதிகாரவர்க்கத்துக்குள் அல்லது பெரும்பான்மை விருப்புக்குள் நீதிமன்றங்களையோ அல்லது அரச நிர்வாகத்தையோ கொண்டுவர முயல்வது ஆரோக்கியமாக அமையாது. முல்லைத்தீவு நீதிபதிக்கு நடந்த கதிபோன்று எவருக்கும் நடைபெறக்கூடாது. அரசாங்கம் இதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். 

நிதி மற்றும் நீதித்துறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியம். இல்லாவிடின் பாரிய நெருக்குதல்களுக்கு நாடு உள்ளாவதை தவிர்க்க முடியாது போகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...