Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பயங்கரவாத சட்டங்கள் தேவையற்றது

T

The Leader Desk

செப்டம்பர் 30, 2023 • 3:33 AM

பயங்கரவாத சட்டங்கள் தேவையற்றது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.
  • யாழில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • ஏனேனில் கடந்த காலத்தில் ஜேவிபி கிளர்ச்சியின் போது கடந்த 78 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டு வரபட்டதே பயங்கரவாத தடைச் சட்டம்.
  • அது சில காலம் மட்டும் தான் எனக் கூறி தற்காலிகமாக கொண்டு வந்திருந்தாலும் 44 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.
எழுத்து அளவு:

சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

தன்னுடைய பதவிக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாமென்ற பயம் ஐனாதிபதிக்கு இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

யாழில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும். தெரிவித்ததாவது,

பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது அதற்கான் பதிலாக கொண்டு வரப்படுகிற பயங்கரவாத எதிரப்பு சட்டமோ இலங்கைக்கு தேவையில்லை.

ஏனேனில் கடந்த காலத்தில் ஜேவிபி கிளர்ச்சியின் போது கடந்த 78 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டு வரபட்டதே பயங்கரவாத தடைச் சட்டம். அது சில காலம் மட்டும் தான் எனக் கூறி தற்காலிகமாக கொண்டு வந்திருந்தாலும் 44 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.

ஆகவே பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. இந்தச் சட்டத்தால் தான் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே இப்போது அது தேவையற்ற சட்டம் தான்.

எனினும் பயங்கரவாதம் நாட்டில் இருப்பதாக சொல்லி புதிய புதிய சட்டங்களை அரசிற்கு ஆதரவாக கொண்டு வருகின்றனர்.

ஏனெனில் அரசாங்கத்தை எதிர்க்கிற போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அல்லது அடக்கி ஒடுக்குவதற்கு அல்லது தண்டனை வழங்குவதற்காக இந்தச் சட்டங்களை கொண்டு வருகின்றனர்.

ஆகவே எம்மைப் பொறுத்த வரையில் பல சாதாரண சட்டங்கள் இருக்கின்ற போது அதனைப் பயன்படுத்துவதை விடுத்து இத்தகைய கொடிய சட்டங்கள் தேவையற்றது.

அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் எமது மக்களை பயப்படுத்தி கஸ்ரப்படுத்தி தமது எதிரிகளை வேறு விதமாக கையாளும் வகையில் இத்த்தகய சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்தாலும் அந்தச் சட்டங்கள் என்பது சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என்று தான் கூறுகிறோம்.

அதே நேரத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வருவதும் பின்னர் விடுவது அல்லது தாமதிப்பது என மாறி மாறி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதிலும் அயச தரப்பில் ஐனாதிபதி ஒரு கட்சியாகவும் ஏனையவர்கள் மற்றொரு கட்சியாகவும் இருக்கின்றனர். இதனாலேயே இந்த இழுபறி ஏற்பட்டு இருக்கலாம். ஆனாலும் இதனைக் கொண்டு தேவையற்றது தான்.

மேலும் இரு தரப்பு பிரச்சனைகளாலும் தன்னுடைய பதவிக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பயம் ஐனாதிபதிக்கு இருக்கும். ஆகையினால் அதிகாரத்துடன் பதவில் இருப்பதற்காகவும் இந்த சட்டத்தை இழுத்து இழுத்து பயன்படுத்தலாமென்றார் என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...