Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை

T

The Leader Desk

செப்டம்பர் 29, 2023 • 10:46 AM

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செலவை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை, மீண்டும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • இந்த ஆண்டு, 4,500 கிகாவோட் மணிநேரம் நீர்மின் திறன் எதிர்பார்க்கப்பட்ட போதும், 3,750 கிகாவோட் மணிநேரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இதன்படி, அனல் மின் நிலையங்களில் இருந்து 750 கிகாவோட் மணிநேரம் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதற்காக மேலதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
  • தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் மேலதிக தொகையை ஈடுசெய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று (27) இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

செலவை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை, மீண்டும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி மாத மின் கட்டணத்தை ஒக்டோபர் மாதமே திருத்தியமைக்க கோரிக்கை விடுத்ததாக மின்சார சபையின் பொது முகாமையாளர்​ நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மீண்டும் ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால் மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு, 4,500  கிகாவோட் மணிநேரம்  நீர்மின் திறன் எதிர்பார்க்கப்பட்ட போதும், 3,750 கிகாவோட் மணிநேரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அனல் மின் நிலையங்களில் இருந்து 750 கிகாவோட் மணிநேரம் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதற்காக மேலதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் மேலதிக தொகையை ஈடுசெய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று (27) இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள கட்டண திருத்த முறையின் படி, ஜனவரி மாதம் நடைபெறவிருந்த மின்சார கட்டண திருத்தத்தை ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாக கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வினவிய போது, ​​மின்சார சபையின் கோரிக்கையை பரிசீலிக்க உள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லீகோ நிறுவனம் இந்த மாதம் முதல் மின்சார கட்டணத்துடன் 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரியை சேர்க்க தீர்மானித்துள்ளது.

இது செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அடுத்த மாதம் வாடிக்கையாளர் பெறும் மின் கட்டணத்தில் புதிய வரியும் உள்ளடக்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை | Tamil Leader | We Lead the Nation