Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

T

The Leader Desk

செப்டம்பர் 28, 2023 • 12:03 PM

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • நம்பிக்கை மற்றும் மனிதநேயத்திற்காக அவர் செய்த அளவற்ற தியாகத்தின் விளைவாக, அவர் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிந்தது.
  • நபிகள் நாயகம் காட்டிய விழுமியங்களுக்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பாதையை வலுப்படுத்த அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எழுத்து அளவு:

உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் தூதரான முஹம்மது நபி அவர்கள், அல்லாஹ்வின் கடைசி இறைத் தூதராவார்.

அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் முகங்கொடுத்த கடினமான அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட தருணத்திலும் பொறுமையும் மௌனமும் தான் அவரின் கூரிய ஆயுதங்களாக இருந்தன. நம்பிக்கை மற்றும் மனிதநேயத்திற்காக அவர் செய்த அளவற்ற தியாகத்தின் விளைவாக, அவர் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிந்தது.

பரஸ்பர புரிதல், சகோதரத்துவம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல், நேர்மை என அவர் வாழ்நாள் முழுவதும் காத்து வந்த பண்புகள், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் நமது நம் வாழ்வில் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். மேலும், அவரது தத்துவத்தை மேலும் சமூகமயமாக்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் பணியாற்றுவது அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த மரியாதை என்று நான் நம்புகிறேன்.

நபிகள் நாயகம் காட்டிய விழுமியங்களுக்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பாதையை வலுப்படுத்த அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இனிய மீலாதுன் நபி தின வாழ்த்துக்கள்!

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...