மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றம்.
மன்னார் உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் நேற்று (26) இரவு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அடம்பன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுங்கண்டல் பகுதியில் நேற்று (26) இரவு 8.30 மணியின் பின்னர் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.
மீட்கப்பட்ட குறித்த நபர் அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்து உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக குறித்த நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர், அடம்பன் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வருகிறது .
குறித்த நபர் விபத்திற்கு உள்ளானாரா? அல்லது தாக்குதல் சம்பவமா? என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மன்னார் பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு
T
The Leader Desk
செப்டம்பர் 27, 2023 • 3:57 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மேலதிக சிகிச்சைக்காக யாழ்.
- மன்னார் உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் நேற்று (26) இரவு மீட்கப்பட்டுள்ளார்.
- குறித்த சம்பவம் அடம்பன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுங்கண்டல் பகுதியில் நேற்று (26) இரவு 8.30 மணியின் பின்னர் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.
- அங்கிருந்து உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக குறித்த நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

