Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

உயிர் கொடுத்து சிசுவின் உயிர் காத்த மருத்துவர்

T

The Leader Desk

செப்டம்பர் 26, 2023 • 7:33 AM

உயிர் கொடுத்து சிசுவின் உயிர் காத்த மருத்துவர்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவசரமாக அழைக்கப்பட்ட நிலையில், குழந்தையை காப்பாற்றி விட்டு மருத்துவர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
  • திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் கண்டி மருத்துவமனையின் 4ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்ட மருத்துவர் பாஹிமா, பின்னர் இரத்த அழுத்தம் அதிகரித்து உயிரிழந்துள்ளார்.
  • எனினும் அவரது இரத்த அழுத்தம் ஏற்கெனவே 200 ஐ தாண்டியிருந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  • கண்டி - அனிவத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பாஹிமா சஹாப்தீன் எனும் மருத்துவர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
எழுத்து அளவு:

குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவசரமாக அழைக்கப்பட்ட நிலையில், குழந்தையை காப்பாற்றி விட்டு மருத்துவர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் கண்டி மருத்துவமனையின் 4ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்ட மருத்துவர் பாஹிமா, பின்னர் இரத்த அழுத்தம் அதிகரித்து உயிரிழந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்து குழந்தையை மீட்ட பிறகு, இந்த மருத்துவர் பாஹிமாவின் நிலை மோசமடைந்ததால், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது இரத்த அழுத்தம் ஏற்கெனவே 200 ஐ தாண்டியிருந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கண்டி - அனிவத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பாஹிமா சஹாப்தீன் எனும் மருத்துவர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக தலையில் உள்ள நரம்பு வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...