Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

T

The Leader Desk

செப்டம்பர் 20, 2023 • 5:17 AM

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆராய்ச்சி நிறுவனம், வெளியிட்டுள்ளது.
  • நேற்று பெய்த கடும் மழையுடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரவு 10.30 மணியளவில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
  • காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ஆராய்ச்சி நிறுவனம், வெளியிட்டுள்ளது.

காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல்  விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பெய்த கடும் மழையுடன், தேசிய கட்டிட  ஆராய்ச்சி நிறுவனம் இரவு 10.30 மணியளவில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொடை, அகலவத்தை, மத்துகம, வல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதல் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மழையுடனான வானிலை மாற்றத்தின் கீழ் இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்படக்கூடும்.

அத்துடன் ஏனைய பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையேற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், அறிவுறுத்தியுள்ளது.

 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...