Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஏழாவது முறையாகவும் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றுமா?

T

The Leader Desk

செப்டம்பர் 17, 2023 • 3:26 AM

ஏழாவது முறையாகவும் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றுமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதில் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும் மோதுகின்றன.
  • நடப்பு செம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பில் உள்ளது.
  • இலங்கை அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டுகளில் செம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
  • நடப்பு தொடரிலும் இலங்கை அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. அதேநேரம் இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
எழுத்து அளவு:

ஆரம்பமாகவுள்ளது.

இதில் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும் மோதுகின்றன.

நடப்பு செம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பில் உள்ளது.

இலங்கை அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டுகளில் செம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

நடப்பு தொடரிலும் இலங்கை அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. 

அதேநேரம் இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குஷால் மெண்டீஸ் (253 ஓட்டங்கள்), சதீர சமர விக்கிரம (215 ஓட்டங்கள்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரன (11 விக்கெட்டும்), வெல்லாலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் (275 ஓட்டங்கள்), லோகேஷ் ராகுல் (169 ஓட்டங்கள்), விராட் கோலி (129 ஓட்டங்கள்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் இன்று மோதுவது 167-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97 போட்டிகளிலும் இலங்கை 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்ததுடன் ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தி 7-வது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...