Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அரசாங்கம் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 16, 2023 • 11:13 AM

அரசாங்கம் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பி வைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களின் தலைமையிலான இந்த விசேட குழு பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • இதன் செயலாளராக பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன செயற்படுகின்றார்.
எழுத்து அளவு:

நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள்  குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பி வைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக கடந்த யூன் 08 ஆம் திகதி அமைக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவினால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  டிரான் அலஸ் அவர்களின் தலைமையிலான இந்த விசேட குழு பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.  

இதன் செயலாளராக பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம்  ஹன்ஸ அபேரத்ன செயற்படுகின்றார்.

பொதுமக்கள் தமது முன்மொழிவுகளையும், கருத்துக்களையும் எழுத்துமூலம் legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே என்ற முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும். 

இதற்கமைய ஆர்வமுள்ள தரப்பினர் 2023 ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன்னர் தமது முன்மொழிவுகளையும், கருத்துக்களையும் அனுப்பிவைக்க முடியும். 

தமது கருத்துக்களை எழுத்துமூலம் சமர்ப்பிக்கும் நபர்களிடமிருந்து அவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்வதற்கு குழு அவசியமென தீர்மானிக்கும் பட்சத்தில் ஆவணங்களுடன் அதன் முன் தோன்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்படுவர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...