Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்!

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2023 • 11:25 AM

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றும் அயலக வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
  • தமிழகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் முதல் கட்டமாக 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் தொடங்கி வைத்தாா்.
  • கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
  • கோடி மதிப்பீட்டில் 3,000 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
எழுத்து அளவு:

மற்றும் அயலக வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் முதல் கட்டமாக 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் தொடங்கி வைத்தாா். இந்த முகாமில் மட்டும் ரூ. 11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.


அதன்படி, தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காணொளி காட்சி மூலம் திறந்துவைத்து மேல்மொணவூா் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களிடம் புதிய குடியிருப்புகளுக்கான சாவிகளையும் வழங்க உள்ளாா்.

இந்த நிலையில், அமைச்சா் செஞ்சி மஸ்தான் மேல்மொணவூரில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களுக்கு முதல் கட்டமாக ரூ. 176 கோடி மதிப்பீட்டில் 3,000 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூா் மாவட்டத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளது. 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் 1,800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கட்டிமுடிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை முதல்வா் ஞாயிற்றுக்கிழமை நேரடியாக மேல்மொணவூரில் இருந்து திறந்து வைக்க உள்ளாா்.

இரண்டாம் கட்டமாகவும் வீடுகள் கட்டும் பணிகள் நடந்துகொண்டுள்ளது. இரண்டாம் கட்டமாக இந்தாண்டு 3,700 வீடுகள் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட உள்ளன. அடிப்படை வசதிகள் கட்டமைப்புகளுடன் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன், ஏ.பி.நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்! | Tamil Leader | We Lead the Nation