Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

டயானாவின் எம்.பி பதவிக்கான தீர்ப்பு ஒக்டோபரில்

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2023 • 3:47 AM

டயானாவின் எம்.பி பதவிக்கான தீர்ப்பு ஒக்டோபரில்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை ஒக்டோபர் 18ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • இந்த தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
  • என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்க முடியும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை ஒக்டோபர் 18ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


பகடிவதை தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம்

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்கள் பகடிவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

076 54 53 454 என்ற தொலைபேசி எண்ணுக்கு நீங்கள் WhatsApp செய்தி, வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை அனுப்பலாம்.

1997 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்க முடியும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பணி நேரத்தில் தாதியர்கள் அலைபேசி பாவிக்கத் தடை

வடமாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளரின் உத்தரவின் பேரில் யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிகள் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களும் தமது பணி நேரத்தில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த சிறுமி அனுமதிக்கப்பட்ட வார்டில் உள்ள தாதியின் கவனக்குறைவால் கையை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், குறித்த தாதியருக்கு எதிராக சாட்சியமளித்த பல நோயாளிகள், தாதி தனது கையடக்கத் தொலைபேசியைக் கையாள்வதற்கே நாளின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்வதாகவும், நோயாளிகளின் கோரிக்கைகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு முதற்கட்டமாக கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வடக்கில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் மற்ற ஊழியர்கள், தாதியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனையை தடை செய்ய வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...