Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

'தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்'

T

The Leader Desk

செப்டம்பர் 14, 2023 • 3:46 PM

'தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பயன்படுத்த வேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பான பேர்ள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54ஆவது அமர்வின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்த கலந்துரையாடல்களின்போது போள் அமைப்பு தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றை நினைவுகூர்ந்துள்ளது.
  • நீதிக்கான முயற்சிகள் இலங்கை அரசினதும் ஐ.நா.
எழுத்து அளவு:

பயன்படுத்த வேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பான பேர்ள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54ஆவது அமர்வின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்த கலந்துரையாடல்களின்போது போள் அமைப்பு தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றை நினைவுகூர்ந்துள்ளது.

நீதிக்கான முயற்சிகள் இலங்கை அரசினதும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளினதும் விருப்பத்திலேயே தங்கியுள்ளது என மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கையின் தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் தங்கள் நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்புப் படையினர் குறித்தும் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க மறுத்துள்ளனர் – தவறியுள்ளனர் எனவும் பேர்ள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் ஆழமாக வேரூன்றிய சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதம் இலங்கையின் அரசியல் நிலப்பரப்பின் பின்னணியில் முக்கிய உந்துசக்தியாகச் செயற்படுகின்றது, இலங்கையில் உறுதியற்ற தன்மையையும் தண்டனையின்மையையும் தொடர்ந்தும் உருவாக்கி வருகின்றது, தமிழர்களைத் தொடர்ந்தும் ஒடுக்கி வருகின்றது எனவும் பேர்ள் தெரிவித்துள்ளது.

இது காணி அபகரிப்பு துரிதமாக இடம்பெறுவதற்கும் வடக்கு – கிழக்கில் சிங்கள பௌத்தமயமாக்கல் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள பேர்ள், சமீபத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை நீதியும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகும் வரை கடந்தகாலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்தும் மன உளைச்சலை கொடுக்கும் என்பதை நினைவூட்டுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் சமீபத்தைய அறிக்கை அதன் முடிவுகள் பரிந்துரைகளை முற்றாக நிராகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ள பேர்ள் அமைப்பு, இலங்கையின் குற்றவாளிகளை பொறுப்புக்கூற செய்வதற்கு சர்வதேசமயமாக்கப்பட்ட பொறிமுறைகளை பயன்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நீதியும் பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் இல்லாத பட்சத்தில் சிங்கள பெரும்பான்மையினவாதம் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படாததாகக் காணப்படும் இன மோதலுக்கான அடிப்படை காரணங்களுக்குத் தீர்வு காணப்படாத நிலை நீடிக்கும் ஸ்திரதன்மையற்ற சூழல் காணப்படும் எனவும், மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் இலங்கையில் நெருக்கடிகள் தொடரும் எனவும் பேர்ள் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்' | Tamil Leader | We Lead the Nation