Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக ஆய்வு கூடத்திற்கு இந்திய துணைத் தூதுவர் விஜயம்

T

The Leader Desk

செப்டம்பர் 12, 2023 • 2:53 AM

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக ஆய்வு கூடத்திற்கு இந்திய துணைத் தூதுவர் விஜயம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் விஜயம் செய்தார்.
  • கடந்த செவ்வாய்க்கிழமை (05) யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளி வீதியில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு கூடத்துக்குச் சென்ற இந்திய துணைத் தூதுவர் ஊடகத் துறையின் மேம்பாடு குறித்து கலந்துரையாடினார்.
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் ஊடக ஆய்வு கூடத்தின் செயற்பாடுகளை விளக்கியதுடன், ஊடக ஆய்வு கூடத்தில் உள்ள வசதிகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பாக விபரித்தார்.
எழுத்து அளவு:

துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் விஜயம் செய்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (05) யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளி வீதியில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு கூடத்துக்குச் சென்ற இந்திய துணைத் தூதுவர் ஊடகத் துறையின் மேம்பாடு குறித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் ஊடக ஆய்வு கூடத்தின் செயற்பாடுகளை விளக்கியதுடன், ஊடக ஆய்வு கூடத்தில் உள்ள வசதிகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பாக விபரித்தார்.

மாணவர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட இந்திய துணைத் தூதுவர் கற்கைகள் தொடர்பான மாணவர்களின் தயாரிப்புகளைப் பாராட்டியதுடன் மாணவர்களுக்கான பயிற்சிகளை நடத்துவதற்கு இந்தியாவில் இருந்து திரைப்பட இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்ற வளவாளர்களையும் அழைப்பதற்கான முன்மொழிவை ஊடக கற்கைகள் துறை சமர்ப்பிக்குமானால் சாதகமாக பரீசிலிப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது இந்திய துணைத் தூதரக அதிகாரி ரா.நாகராஜன்,ஊடக கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான பூங்குழலி சிறீசங்கீர்த்தனன், சிரேஸ்ட விரிவுரையாளர் ஜூட் தினேஷ் கொடுதோர், விரிவுரையாளர் அனுதர்சி கபிலன் மற்றும் ஊடக ஆய்வுகூட ஊழியர்கள் ஊடகத்துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதர் அதிகாரிகளுடன் ஊடக ஆய்வு கூடத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...