Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கஹவத்த சம்பவத்தை வைத்துக்கொண்டு நாம் அரசியல் நடத்த முற்படவில்லை!

T

The Leader Desk

செப்டம்பர் 11, 2023 • 2:40 PM

கஹவத்த சம்பவத்தை வைத்துக்கொண்டு நாம் அரசியல் நடத்த முற்படவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம்." என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
  • மலையக அரசியல் வாதிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என ஒரு அரசியல்வாதி கூறுகின்றார்.
  • இரத்தினபுரி, கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வெள்ளந்துரை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம்போல் இனி எங்கும் நடக்ககூடாது என்பதால்தான் மலையக மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம்." என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வெள்ளந்துரை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம்போல் இனி எங்கும் நடக்ககூடாது என்பதால்தான் மலையக மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்..

இது தொடர்பில் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

"வெள்ளந்துரை தோட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மாணவி பல்கலைக்கழகம் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும், புலமைப்பரிசிலொன்றையும் வழங்கவுள்ளோம். அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இதனை நாம் எழுத்துமூலம் கோரியுள்ளோம்.

இச்சம்பவத்தை வைத்துக்கொண்டு நாம் அரசியல் நடத்த முற்படவில்லை. மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். மலையக அரசியல் வாதிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என ஒரு அரசியல்வாதி கூறுகின்றார். இப்படியான பிரச்சினைகள் பற்றிபேசி தீர்வைக்காணவே ஜனாதிபதியுடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் பங்கேற்காமல் நடை பயணம் சென்றனர்.

ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதற்காக அனுசரித்து செல்கின்றோம். மக்களுக்காக பொறுமை காக்கின்றோம். எனவே, மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மலையக அரசியல்வாதிகள் ஒன்றுபட வேண்டும். சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.'' என்று அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...