Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சிங்கப்பூரில் மனைவியை கொலை செய்த இலங்கையர்

T

The Leader Desk

செப்டம்பர் 11, 2023 • 8:26 AM

சிங்கப்பூரில் மனைவியை கொலை செய்த இலங்கையர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிங்கப்பூர் பொலிஸார் இன்று (11) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
  • எஷான் தாரக கோட்டகே என்ற 30 வயதுடைய நபரே தனது மனைவியை கெட்டோன்கேவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கொலை செய்துள்ளதாக சேனல் நியூஸ் ஏசியா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
  • கடந்த வெள்ளிக்கிழமை (09) காலை 10.45க்கும் மாலை 4.42க்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
  • சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஒரு வார காலம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

சிங்கப்பூர் பொலிஸார் இன்று (11) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எஷான் தாரக கோட்டகே என்ற 30 வயதுடைய நபரே தனது மனைவியை கெட்டோன்கேவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கொலை செய்துள்ளதாக சேனல் நியூஸ் ஏசியா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வந்தி மதுகா குமாரி என்ற பெண்ணே அங்கு உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (09) காலை 10.45க்கும் மாலை 4.42க்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஒரு வார காலம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொலையை செய்த நிலையில், சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பின்னர் பொலிஸார் ஹோட்டலின் அறையொன்றிலிருந்து 32 வயதுடைய பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

இந்த கொலையின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...