Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கஹாவத்தை சம்பவம் – அமைச்சரின் தலையீட்டால் தீர்வு

T

The Leader Desk

செப்டம்பர் 11, 2023 • 3:12 AM

கஹாவத்தை சம்பவம் – அமைச்சரின் தலையீட்டால் தீர்வு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்காலிகமாக அமைத்திருந்த வீடு தகர்க்கப்பட்டது.
  • இந்த நடவடிக்கை தொடர்பாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கவனத்திற்கும் உடன் கொண்டு சென்றார்.
  • இதனை அடுத்து உடன் சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்திற்கு கடும் தொனியில் எச்சரித்தார்.
எழுத்து அளவு:

தற்காலிகமாக அமைத்திருந்த வீடு தகர்க்கப்பட்டது.

இதனை அடுத்து உடன் சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்திற்கு கடும் தொனியில் எச்சரித்தார்.

இந்த நடவடிக்கை தொடர்பாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கவனத்திற்கும் உடன் கொண்டு சென்றார்.

இந்த மனிதாபிமானமற்ற முறையில் நடந்துக் கொண்ட தோட்ட முகாமைத்துவத்தை வன்மையாக கண்டித்ததுடன், உடனடியாக அவர்களுக்கு வீட்டை பெற்றுத்தரவும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயில உள்ள மாணவிக்கு முழுமையான புலமைபரிசில் வழங்கவும், அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தில் அதிகாரியாக நியமனம் ஒன்று வழங்கவும் உத்தரவிட்டார்.

இதற்கு இணங்கிய பெருந்தோட்டயாக்கம், அவர்களுக்கு உடன் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், இவ்வாண்டு வரவு செலவு திட்டத்திற்கு பின் இரத்தினபுரி மாவட்டத்திற்கு அதிகப்படியான வீடுகளை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கு ஆலோசனை வழங்கியதோடு, அது மட்டுமல்லாது குறித்த தோட்டத்திற்கு மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கும் நடடிவடிக்கை எடுக்குமாறு மேற்படி நிதியத்திற்கு மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்போது, அமைச்சருடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் ராஜமணி, இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ரூபன் பெருமாள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் குமார், அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் என பலரும் இந்த சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மக்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ, அங்கு அவர்களுக்காக துணை நிற்பதாக இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...