Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் - ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானங்கள்

T

The Leader Desk

செப்டம்பர் 11, 2023 • 3:11 AM

ஈஸ்டர் தாக்குதல் - ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானங்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார்.
  • ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ள இந்த இரண்டு அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
  • ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் முழு இலங்கையும் சோகத்தில் ஆழ்த்தியதை நினைவுகூர வேண்டியது அவசியம்.
  • உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளில் கலந்துகொண்ட பக்தர்கள் நிறைந்த கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சொகுசு நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து, கொழும்பு நகரம் மற்றும் அதன் அண்டிய 08 இடங்களில் பேரழிவை ஏற்படுத்தும் 08 வெடிப்புகள் இடம்பெற்றன.
எழுத்து அளவு:

மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டவும் சாதகமான நடவடிக்கையாக ஜனாதிபதி இந்தக் குழுவை நியமிக்க உள்ளார்.

நாசகார ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் இதே போன்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

எனவே இந்த நிலைமை எரியும் நெருப்பில் வைக்கோல் சேர்ப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினைகளை பரந்தளவில் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்காக, இந்த தூண்டுதல் ஏற்படுத்தும் கூற்றுக்களை விசாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

தற்போதைய நிலைமையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விரிவாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ள இந்த இரண்டு அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சரியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைக்கு வழி வகுத்து, நிலைமையைப் பற்றிய தெளிவான புரிதலை சட்டம் இயற்றுபவர்களுக்கு வழங்குவதே இந்த விரிவான செயல்முறையின் நோக்கமாகும்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் முழு இலங்கையும் சோகத்தில் ஆழ்த்தியதை நினைவுகூர வேண்டியது அவசியம். உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளில் கலந்துகொண்ட பக்தர்கள் நிறைந்த கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சொகுசு நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து, கொழும்பு நகரம் மற்றும் அதன் அண்டிய 08 இடங்களில் பேரழிவை ஏற்படுத்தும் 08 வெடிப்புகள் இடம்பெற்றன.

இஸ்லாமிய தீவிரவாத பயங்கரவாதக் குழுக்களினால் நடத்தப்பட்ட இந்த தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 269 அப்பாவி உயிர்கள் பலியாகியதோடு சுமார் 500 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துயரச் சம்பவத்தின் பாதகமான விளைவுகளுடன் முழு நாடும் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த நடவடிக்கையானது உண்மையை வெளிப்படுத்தவும், பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கையாகும்.

உண்மையைக் கண்டறிவதற்காக இந்த முக்கியமான விசாரணைகள் நடத்தப்படும் அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஈஸ்டர் தாக்குதல் - ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானங்கள் | Tamil Leader | We Lead the Nation