Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வெளிநாடு செல்லவுள்ள பணியாளர்கள் குறித்த தீர்மானம்!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2023 • 3:20 PM

வெளிநாடு செல்லவுள்ள பணியாளர்கள் குறித்த தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பெற்றுக்கொள்ளக் கூடிய அதிகூடிய வெளிநாட்டுச் செலாவணி மற்றும் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
  • அதனால் இந்த வேலைத்திட்டத்தை நீண்ட காலத்துக்கு மேற்கொள்ள வேண்டும் என குழுவின் தலைவரினால் வலியுறுத்தப்பட்டது.
  • இந்தக் குழுக் கூட்டம் அண்மையில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
எழுத்து அளவு:

வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பெற்றுக்கொள்ளக் கூடிய அதிகூடிய வெளிநாட்டுச் செலாவணி மற்றும் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டம் அண்மையில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.

இதில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் குறிப்பிடுகையில், 

கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் அதிகாரிகள், கள அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் விழிப்பூட்டும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய கையேடு ஒன்றை தயாரித்துள்ளதாகவும், அதனை அச்சிட்டும், இணையத்தின் ஊடாகவும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கும் தனி நபர்களுக்கும் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கிராமிய மட்டத்திலான நபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையுடன் தொடர்புபடும் போது சரியான மற்றும் குறிப்பான தகவல்களைப் பெறுவதில் சிக்கல் இருப்பதால் போலி நிறுவனங்கள் மற்றும் முகவர்களின் முறைகேடான செயற்பாடுகளுக்கு அகப்படுவதால் அவர்களின் நேரமும் நிதியும் வீணடிக்கப்படுவதாக குழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது. அதனால் இந்த வேலைத்திட்டத்தை நீண்ட காலத்துக்கு மேற்கொள்ள வேண்டும் என குழுவின் தலைவரினால் வலியுறுத்தப்பட்டது.

அதற்கு மேலதிகமாக, ஊழியர் சேமலாப நிதியத்தின் முதலீட்டுத் தீர்மானம் எடுக்கும் போது தொழில் அமைச்சின் அதிகாரிகளின் பிரதிநிதித்துவத்தைப் பெறுவது முக்கியமானது என குழுவில் கலந்துரையாடப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...