Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஐந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

T

The Leader Desk

செப்டம்பர் 7, 2023 • 4:54 PM

ஐந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்த அறிவிப்பில் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • காலி மாவட்டத்தின் நாகொடை, பத்தேகம மற்றும் எல்பிட்டிய பிரதேசங்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, பாலிந்தநுவர, வல்லாவிட்ட மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் நி்ற மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • இன்று (07) மாலை 4 மணி முதல் நாளை (08) மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

அந்த அறிவிப்பில் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, இரத்தினபுரி, எஹெலியகொட மற்றும் கலவான ஆகிய பகுதிகளுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேசத்திற்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும், கேகாலை மற்றும் கண்டி காலி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நாகொடை, பத்தேகம மற்றும் எல்பிட்டிய பிரதேசங்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, பாலிந்தநுவர, வல்லாவிட்ட மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் நி்ற மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் மேல் பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெரணியகல, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, ருவன்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம, எலபாத்த, கொலொன்ன, பெல்மடுல்ல, கஹவத்த, கிரியெல்ல, கொடகவெல மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேசங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (07) மாலை 4 மணி முதல் நாளை (08) மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...