Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு

T

The Leader Desk

செப்டம்பர் 7, 2023 • 4:53 PM

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் புறக்கோட்டையில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை விற்பனை வர்த்தக நிலையங்களிலும் ஆராயப்பட்டன.
  • அதேநேரம் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் கீரி சம்பா அரிசி எந்த வர்த்தக நிலையத்திலும் காணப்படவில்லை.
  • இந்த பின்னணியில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பிலான சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை இன்று (07) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

இது தொடர்பில் புறக்கோட்டையில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை விற்பனை வர்த்தக நிலையங்களிலும் ஆராயப்பட்டன.

அரிசி ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசியை விற்பனை செய்வதால் அதன் விற்பனையை நிறுத்தியுள்ளதாக மொத்த வியாபாரிகள் பலர் கூறுகினர்.

சில்லறை விற்பனைக் கடைகளிலும் இதே நிலையே காணப்படுகிறது.

சில சில்லறை விற்பனைக் கடைகளில் நாட்டு அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் கீரி சம்பா அரிசி எந்த வர்த்தக நிலையத்திலும் காணப்படவில்லை.

கொழும்பிற்கு வெளியேவும் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உணவக உரிமையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களினால் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பின்னணியில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பிலான சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை இன்று (07) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கீரி சம்பா கிலோ ஒன்று 260 ரூபாவாகவும், சம்பா கிலோ 230 ரூபாவாகவும், நாட்டரிசி கிலோ 220 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 210 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பில் 1977 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களை கோரியுள்ளது. 

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...