Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு ஆபத்து

T

The Leader Desk

செப்டம்பர் 6, 2023 • 4:32 PM

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு ஆபத்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிகளவிலான கால்நடைகள் உயிரிழப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
  • இதேவேளை ஹட்டன் பகுதிகளில் உள்ள வைத்தியருக்கு பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா பகுதிகளுக்கு சென்று அவருடைய சேவையினை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
  • பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா போன்ற பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு திடீர் சுகயீனம் ஏற்படுகின்ற போது அப்பிரதேச மக்கள் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள கால்நடை வைத்தியரை நாட வேண்டி இருக்கின்றது.
எழுத்து அளவு:

அதிகளவிலான கால்நடைகள் உயிரிழப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இன்று (06) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள விசேட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,

நுவரெலியா - நோரவுட் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ, மஸ்கெலியா போன்ற கால்நடை வைத்தியசாலையில் நீண்ட காலமாக கால்நடை வைத்தியர்கள் இன்மையால் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா போன்ற பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு திடீர் சுகயீனம் ஏற்படுகின்ற போது அப்பிரதேச மக்கள் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள கால்நடை வைத்தியரை நாட வேண்டி இருக்கின்றது.

இதேவேளை ஹட்டன் பகுதிகளில் உள்ள வைத்தியருக்கு பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா பகுதிகளுக்கு சென்று அவருடைய சேவையினை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் கால்நடை வளர்ப்பாளர்கள் இது தொடர்பில் என்னிடம் முன்னவைத்த கோரிக்கைக்கு அமைய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கலந்துரையாடி பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா போன்ற கால்நடை வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

இருந்த போதிலும் வெகு விரைவில் குறித்த இரண்டு வைத்தியசாலைகளுக்கும் வைத்தியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...