Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சஜித்தின் சட்டவிரோத ஆட்சேர்ப்பு குறித்த வௌிப்படுத்தல்!

T

The Leader Desk

செப்டம்பர் 6, 2023 • 2:57 AM

சஜித்தின் சட்டவிரோத ஆட்சேர்ப்பு குறித்த வௌிப்படுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அபிவிருத்தி அதிகார சபையில் சுமார் 2100 ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே நேற்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் (ஸ்ரீ.பொ.பெ) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே நேற்று (5) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
  • இந்த ஊழியர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் தாம் பிரதிநிதித்துவப்படுத்திய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் எனவும் இது சட்டவிரோதமானது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

அபிவிருத்தி அதிகார சபையில் சுமார் 2100 ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே நேற்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த ஊழியர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் தாம் பிரதிநிதித்துவப்படுத்திய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் எனவும் இது சட்டவிரோதமானது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் (ஸ்ரீ.பொ.பெ) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே நேற்று (5) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. அங்கு தொடர்ந்து பேசிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே,

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இந்த ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இவ்வாறு தொடர்ந்து ஆட்சேர்ப்புக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வருடாந்தம் 1537 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலயங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவர்களுக்கு வேலை செய்வதற்கு மேசை அல்லது நாற்காலி இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த ஊழியர்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போதும் அவர்கள் அப்போது வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் அலுவலகங்களில் பணியாற்றியதாக அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...