Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

T

The Leader Desk

செப்டம்பர் 1, 2023 • 4:19 AM

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாவட்டத்தின் மொத்த குடிநீர்த் தேவை தொடர்பிலான முழுமையான அறிக்கையை வழங்குமாறு கம்பஹா மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன படிகோரலவிடம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
  • % ஆன குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து குழாய்களையும் பதித்து முடிக்க முடியும் என்றும் குடிநீர் வழங்கல் சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • பிரதேச செயலாளர் மட்டத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கி கம்பஹா மாவட்டத்தின் 90% நீர் தேவையை பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
எழுத்து அளவு:

மாவட்டத்தின் மொத்த குடிநீர்த் தேவை தொடர்பிலான முழுமையான அறிக்கையை வழங்குமாறு கம்பஹா மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன படிகோரலவிடம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த வருட இறுதிக்குள் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

கம்பஹா 'லக் சியனே மதுர'வில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை வலியுறுத்தினார்.

கரஸ்னாகல நீர்த்திட்டம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என நீர் வழங்கல் சபையிடம் அமைச்சர் கேட்டார்.

கரஸ்நாகல நீர்த்திட்டம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் திட்டத்தை நிறைவு செய்ய முடிந்தால் கம்பஹா மாவட்ட மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் எனவும் நீர் வழங்கல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கரஸ்னாகல நீர்த்திட்டத்தை டிசம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்வதற்கு திட்டவட்டமான பதில் வழங்காமைக்கான காரணம் என்ன என அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

80% ஆன குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து குழாய்களையும் பதித்து முடிக்க முடியும் என்றும் குடிநீர் வழங்கல் சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதேச செயலாளர் மட்டத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கி கம்பஹா மாவட்டத்தின் 90% நீர் தேவையை பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

அத்தனகல்ல நீர் திட்டம் டிசெம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமா என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேட்டார். ஒரே நேரத்தில் வழங்கப்படுமா? மொத்தத் தேவையில் எவ்வளவு மட்டத்தால் ஈடுசெய்யப்படுகிறது? இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை விரைவில் வழங்க வேண்டும்.

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கம்பஹா மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன பாடிகோரள, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள், பாதுகாப்பு படைத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...