Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

காரில் சிக்கிய இளம் ஜோடி

T

The Leader Desk

ஆகஸ்ட் 28, 2023 • 10:59 AM

காரில் சிக்கிய இளம் ஜோடி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆவணங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன.
  • போலி ஆவணங்களை ஏற்றிக்கொண்டு காரில் நுவரெலியாவுக்கு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (27) மாலை காருடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
  • சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முச்சக்கரவண்டியொன்றின் பதிவு சான்றிதழை தயாரித்து தருவதாக கூறி பேராதனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 180,000 ரூபாய் பண மோசடி செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
  • கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நகுலகமுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் 21 வயதுடைய பெண் சந்தேகநபர் ஹிங்குராக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
எழுத்து அளவு:

ஆவணங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன.

அதன்படி, நுவரெலியா பொலிஸார் அவர்கள் இருவரையும் போலி ஆவணங்களுடன் கைது செய்தனர்.

போலி ஆவணங்களை ஏற்றிக்கொண்டு காரில் நுவரெலியாவுக்கு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (27) மாலை காருடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களிடம் 03 மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், 03 வருமான உரிமங்கள், 03 காப்புறுதிச் சான்றிதழ்கள், நிதி நிறுவனம் ஒன்றின் பெயரை பயன்படுத்தி தவணைகள் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த 03 கடிதங்கள், வாகனங்களை  பறிமுதல் செய்வதற்கான ஆட்சேபனை இல்லை என 03 கடிதங்கள்,  வாகன இலக்கத் தகடு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாட்டின் 03 பிரதிகள், 03 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முச்சக்கரவண்டியொன்றின் பதிவு சான்றிதழை தயாரித்து தருவதாக கூறி பேராதனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 180,000 ரூபாய் பண மோசடி செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

பின்னர், இது தொடர்பான முறைப்பாடு பேராதனை பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நகுலகமுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் 21 வயதுடைய பெண் சந்தேகநபர் ஹிங்குராக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர்கள் இன்று (28) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...