Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சிகிரியாவை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

T

The Leader Desk

ஆகஸ்ட் 28, 2023 • 10:57 AM

சிகிரியாவை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
  • அதன் அடிப்படை திட்டமிடல் நடவடிக்கைகள் இந்த நாட்களில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன.
  • இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பெருமளவு வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:



ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பெருமளவு வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிகிரியாவை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்ததன் பிரகாரம், புதிய கிராம வாகன தரிப்பிடம், சுகாதார வசதிகள் மற்றும் சிகிரியா நுழைவாயில் நிர்மாணம், சிகிரியா தகவல் நிலையத்தை நிறுவுதல், மாபாகல தொல்பொருள் நிலையத்தை பாதுகாத்தல், சிகிரியா ஏரியை புனரமைத்தல், ராமகெலேயில் இருந்து பிதுரங்கல வரையிலான பாரம்பரிய பாதையை நிறுவுதல்.

கலுதிய குளத்தைச் சுற்றியுள்ள தொல்பொருள் நிலையங்களைப் பாதுகாத்தல், இனாமலுவ ஏரியை மையமாகக் கொண்ட சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கலேவெல ஏரியை மையமாகக் கொண்ட சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் திகம்பத்தன பிரதேசத்தில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு அபிவிருத்தி ஆகிய 9 உப திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, ​​சிகிரியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள் பிளாஸ்டிக் பாவனையற்ற சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படை திட்டமிடல் நடவடிக்கைகள் இந்த நாட்களில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன.

சிகிரியாவை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யும் போது, ​​உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அபிவிருத்திக்குத் தேவையான தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், இத்திட்டம் தொடர்பில் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தம்புள்ளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அறிவிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...