Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

திருமண நிகழ்வில் பறிபோன இளம் யுவதியின் உயிர்

T

The Leader Desk

ஆகஸ்ட் 28, 2023 • 10:56 AM

திருமண நிகழ்வில் பறிபோன இளம் யுவதியின் உயிர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • ஹொரணை படுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மீகொடை உடகஹவத்தை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
  • அங்கு குழுவினருடன் அவர் நடனமாடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எழுத்து அளவு:

செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை படுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மீகொடை உடகஹவத்தை பகுதியை சேர்ந்த  25 வயதுடைய திருமணமாகாத இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், தாம்முடன் பணிபுரியும் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்விற்காக சில நபர்களுடன் ஹொரணை கொனபொல பகுதியில் உள்ள திருமண மண்டபமொன்றுக்கு  சென்றுள்ளார்.

அங்கு குழுவினருடன் அவர் நடனமாடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதி மேலும் இரு யுவதிகளுடன் நடனமாடிக்கொண்டிருந்த வேளையில் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் சிறிது நேரத்தின் பின்னர் சுகவீனமடைந்து ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவரை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

பின்னர் குறித்த யுவதி ஹொரணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் யுவதியின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், சுவாசக் குழாயில் உணவு சிக்கி சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக ஹொரணை ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் சுமேதா குணவர்தனவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் பிரணித செனவிரத்னவால் இந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...