Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பெண்களுக்கு இனி இந்த உரிமை - மேலும் ஒரு தடை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 28, 2023 • 3:39 AM

பெண்களுக்கு இனி இந்த உரிமை - மேலும் ஒரு தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு அங்கு பெண்களுக்கு எதிரான சுதந்திரம் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது.
  • இருப்பினும், தலிபான்கள் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் விதமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணமே உள்ளனர்.
  • பெண்கள் உயர்நிலை கல்வி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
எழுத்து அளவு:



ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு அங்கு பெண்களுக்கு எதிரான சுதந்திரம் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் உயர்நிலை கல்வி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், பல்கலைக் கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவைகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்த பிறகு அவர்கள் பெண்களின் சுதந்திரத்துக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தலிபான்கள் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் விதமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணமே உள்ளனர்.

பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து தலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் பேசியதாவது: பெண்கள் பூங்காவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன. பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கான நடைமுறை தயாராகும் வரை அவர்கள் பூங்காக்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. ஹிஜாப் அணிவதை பலரும் சரிவர பின்பற்றாமால் இருக்கிறார்கள் என்றார்.

பூங்காக்களுக்கு செல்வதற்கு தடை விதித்தது மட்டுமின்றி ஆண் துணையின்றி பெண்கள் வெளியில் செல்ல தடை, பொதுக் கழிப்பிடங்களை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு போன்ற தடைகளும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பெண்களுக்கு இனி இந்த உரிமை - மேலும் ஒரு தடை! | Tamil Leader | We Lead the Nation