Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மர்மமாக உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2023 • 8:13 AM

மர்மமாக உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (26) காலை, சேத்தபொல களப்பிற்கு அருகில் இனந்தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
  • நரக்கலிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
  • கடந்த 25ஆம் திகதி இரவு ராகம தெவத்த தேவாலயத்திற்கு முச்சக்கர வண்டியில் மேலும் சிலருடன் செல்வதாகக் கூறிவிட்டு உயிரிழந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) காலை, சேத்தபொல  களப்பிற்கு அருகில் இனந்தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, ​​நெற்றி மற்றும் இடது கையில் வெட்டுக்காயங்களுடன் இறந்த பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டனர்.

குறித்த பெண்ணின் சடலத்திற்கு அருகில் பை ஒன்றில் காணப்பட்ட கையடக்கதொலைபேசி இலக்கத்தை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இலக்கம் உயிரிழந்தவரின் மகளுடையது என தெரியவந்துள்ளது.

பின்னர், மகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்த நிலையில், அங்கு இறந்தது தாயின் உடல் என அடையாளம் காட்டினார்.

நரக்கலிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி இரவு ராகம தெவத்த தேவாலயத்திற்கு முச்சக்கர வண்டியில் மேலும் சிலருடன் செல்வதாகக் கூறிவிட்டு உயிரிழந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றிரவு மகள் தாயாரை அழைத்தபோது, ​​தாய் பதிலளித்ததாகவும் மகள் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மர்மமாக உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு | Tamil Leader | We Lead the Nation