Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

விமான நிலைய சொகுசு பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2023 • 8:10 AM

விமான நிலைய சொகுசு பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
  • கட்டுநாயக்க 18ஆவது மைல்கல் சந்தியில் பேரூந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தடை விதித்தமையே இதற்குக் காரணம்.
  • விமான நிலையம் - கோட்டை பாதையில் சுமார் 71 சொகுசு பேருந்துகள் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக பயணிக்கின்றன.
  • விமான நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அந்த பேருந்துகளுக்கு பயணிகள் ஏற்றும் பிரதான பேருந்து நிலையமாக நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள 18 ஆவது மைல்கல் சந்தியில் உள்ள பேருந்து நிறுத்துமிடமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

கட்டுநாயக்க 18ஆவது மைல்கல்  சந்தியில் பேரூந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு  மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தடை விதித்தமையே இதற்குக் காரணம்.

விமான நிலையம் - கோட்டை பாதையில் சுமார் 71 சொகுசு பேருந்துகள் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக  பயணிக்கின்றன.

விமான நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அந்த பேருந்துகளுக்கு பயணிகள் ஏற்றும் பிரதான பேருந்து நிலையமாக  நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள 18 ஆவது மைல்கல் சந்தியில் உள்ள பேருந்து நிறுத்துமிடமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாகாண போக்குவரத்து அதிகாரசபையால் அந்த பேரூந்து நிலையத்தில் இருந்து சொகுசு பேரூந்துகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல  தடை விதித்துள்ளமையால் பேருந்து உரிமையாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

18வது மைல்கல் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல மறுப்பதால் சொகுசு பேருந்துகளின் வருவாய் குறைந்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க எதிர்பார்க்கும் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அனைத்து காரணங்களையும் முன்னிறுத்தி  நேற்று முதல் பேருந்து சாரதிகள் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...