Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சவுதி அரேபியாவின் கடுமையான தீர்மானம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2023 • 3:51 AM

சவுதி அரேபியாவின் கடுமையான தீர்மானம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த கடும் நடவடிக்கை நாட்டின் சிறுவர் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஏற்றதாகவும், எதிர்வரும் கல்வியாண்டில் கல்வியின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கைகளின்படி, "ஒரு மாணவர் 20 நாட்களுக்கு ஒரு முறையான காரணமின்றி பாடசாலைக்கு வராமல் இருந்தால், அவர்களின் பாதுகாவலர் நாட்டின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.
  • நெருங்கி வரும் கல்வியாண்டிற்கான உகந்த கற்றல் சூழல் அல்லது "சிறந்த ஆய்வுகளை" மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அதன்படி, சவுதி அரேபியாவில் மாணவர்கள முறையான காரணம் இன்றி 20 நாட்களுக்கு மேல் பாடசாலைக்கு சமூகமளிக்காவிடின்  பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

இதில், பெற்றோர்கள் கைதாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் நடவடிக்கை நாட்டின் சிறுவர் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஏற்றதாகவும், எதிர்வரும் கல்வியாண்டில் கல்வியின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கைகளின்படி, "ஒரு மாணவர் 20 நாட்களுக்கு ஒரு முறையான காரணமின்றி பாடசாலைக்கு வராமல் இருந்தால், அவர்களின் பாதுகாவலர் நாட்டின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.

விசாரணை முடிந்ததும், வழக்கு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். 

மாணவர் நீண்ட காலமாக இல்லாதது குறித்து பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கவனக்குறைவு ஏற்பட்டால், அதற்குரிய சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

நெருங்கி வரும் கல்வியாண்டிற்கான உகந்த கற்றல் சூழல் அல்லது "சிறந்த ஆய்வுகளை" மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வராத மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு எதிரான சட்ட நடைமுறை பல நிலைகளை உள்ளடக்கியது. 

பாடசாலை  தலைமையாசிரியர் இந்த வழக்கை சம்பந்தப்பட்ட கல்வித் துறைக்கு தெரிவிக்க வேண்டும். அது விசாரணையைத் தொடங்கும்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை கல்வி அமைச்சகம் மேற்கொள்ளும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...