Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பிரமிட் மோசடி திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர்கள் சிக்கினர்

T

The Leader Desk

ஆகஸ்ட் 26, 2023 • 5:06 PM

பிரமிட் மோசடி திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர்கள் சிக்கினர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டில் பிரமிட் மோசடி மூலம் சுமார் 4 கோடி ரூபாவை சீன பிரஜைகள் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் பொரளையில் பெறப்பட்ட வீடொன்றில் வசித்து வந்த சீன பிரஜை ஒருவர் , தனது வீடு சிலரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடந்த 19ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
  • வேன், 7 மடிக்கணினிகள் மற்றும் 170 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
  • கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என அவர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

கைது செய்துள்ளனர்.

நாட்டில் பிரமிட் மோசடி மூலம் சுமார் 4 கோடி ரூபாவை சீன பிரஜைகள் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

7 இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் பொரளையில் பெறப்பட்ட வீடொன்றில் வசித்து வந்த சீன பிரஜை ஒருவர் , தனது வீடு சிலரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடந்த 19ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

வேன், 7 மடிக்கணினிகள் மற்றும் 170 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என அவர் கூறியுள்ளார்.

இதன்படி, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், பொலிஸார் தொலைபேசி தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து மூன்று இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிந்தனர்.

இதற்கமைய இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, அவர்களில் குறித்த சீன பிரஜையின் சாரதியும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

சீன நாட்டவர் 15 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் கொடுத்து கொள்ளையடிப்பது போல் நடிக்குமாறு கூறியதாக கைதான இலங்கையர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

பின்னர் அந்த சீன பிரஜையும் அவரது மற்றொரு சீன நண்பரையும் பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொழும்பு துறைமுக நகரத்தில் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதாக கூறி மறைமுகமாக இவர்கள் இருவரும் நாட்டில் பாரியளவில் பிரமிட் மோசடியினை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 4 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான பணத்தினை சூதாட்ட விளையாட்டுக்கு சென்று தோற்றுள்ள நிலையில், அதனை மறைப்பதற்காகவே இவ்வாறான போலியான கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்குரிய சீன பிரஜைகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பின்னர், பிரமிட் திட்டத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சீன பிரஜை வசித்து வந்த கொழும்பு குருந்துவத்தையில் உள்ள வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர்.

அதற்கு முன்பே அங்கிருந்த 15 சீன பிரஜைகள் சுமார் 40 மடிக்கணினிகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் சர்வதேச அளவிலான பிரமிட் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கொள்ளையிட்டதாக கூறப்படும் வேன் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்த வெளிநாட்டு சிகரெட்டுகளையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் இடம்பெற்று வருகின்றன.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...