Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 25, 2023 • 11:16 AM

சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முல்லைதீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் அண்மையில் பாராளுமன்றில் உரையொன்றை ஆற்றியிருந்தார்.
  • அந்த உரையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று (25) காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்தது.
  • இதனால் போராட்டம் இடம்பெற்ற நேரத்தில் யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

முல்லைதீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் அண்மையில் பாராளுமன்றில் உரையொன்றை ஆற்றியிருந்தார்.

அந்த உரையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று (25) காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்தது.

இந்த அடையாள புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொண்டன.

இதனால் போராட்டம் இடம்பெற்ற நேரத்தில் யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நீதிமன்றம்

யாழ்ப்பாண நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாவகச்சேரி நீதிமன்றம்

சாவகச்சேரி நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...