Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

போலி வீடியோவை சமூகவலைத்தளத்தில் பரப்பிய மாணவன் கைது

T

The Leader Desk

ஆகஸ்ட் 24, 2023 • 4:18 PM

போலி வீடியோவை சமூகவலைத்தளத்தில் பரப்பிய மாணவன் கைது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாணவன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • பின்னர் அந்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (23) கைது செய்யப்பட்டார்.
  • ஒன்லைன் முறை மூலம் நடத்தப்படும் மேலதிக வகுப்புகளுக்கு தனது தாயின் கைபேசியை எடுத்துச் சென்றதாகவும், அது தொடர்பான வீடியோ அதில் இணைந்த வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்டதாகவும் சந்தேகநபரான மாணவர் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எழுத்து அளவு:

மாணவன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல குழந்தை நட்சத்திரத்தின் போலி அரை நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக சம்பந்தப்பட்ட மாணவியின் தாயார் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் சமீபத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

அதன்படி, பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் இது தொடர்பான வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக விசாரணைகளை மேற்கொண்ட உரிய பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (23) கைது செய்யப்பட்டார்.

ஒன்லைன் முறை மூலம் நடத்தப்படும் மேலதிக வகுப்புகளுக்கு தனது தாயின் கைபேசியை எடுத்துச் சென்றதாகவும், அது தொடர்பான வீடியோ அதில் இணைந்த வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்டதாகவும் சந்தேகநபரான மாணவர் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த போலியான காணொளி வேறு ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மாணவன் விசாரணை அதிகாரிகளிடம் கூறினாலும் குறித்த நபர் யார் என இதுவரை தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பின்னர் சந்தேகநபரான மாணவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...