Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கனடா செல்ல முயற்சித்த சிகையலங்கார நிபுணர் கைது

T

The Leader Desk

ஆகஸ்ட் 24, 2023 • 4:18 PM

கனடா செல்ல முயற்சித்த சிகையலங்கார நிபுணர் கைது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய பிரபல சிகையலங்கார நிபுணர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
  • நேற்று (23) பிற்பகல் குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான அனுமதிப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன், அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கரும பீடத்தில் வழங்கிய கனேடிய விசா தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
  • அங்கு சந்தேக நபரை குடிவரவு எல்லை அமுலாக்க பிரிவு அதிகாரிகளிடம் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
  • மேலும், சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​45 இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து, தரகர் ஒருவரிடமிருந்து போலி அனுமதிப்பத்திரம் பெறப்பட்டதாக தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய பிரபல சிகையலங்கார நிபுணர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஐக்கிய அரபு இராச்சியம் ஊடாக கனடா செல்ல முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் பல சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

நேற்று (23) பிற்பகல் குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான அனுமதிப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன், அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கரும பீடத்தில் வழங்கிய கனேடிய விசா தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அங்கு சந்தேக நபரை குடிவரவு எல்லை அமுலாக்க பிரிவு அதிகாரிகளிடம் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணையில் சந்தேகநபர் வழங்கிய விசா போலியானது என தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​45 இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து, தரகர் ஒருவரிடமிருந்து போலி அனுமதிப்பத்திரம் பெறப்பட்டதாக தெரிவித்தார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...