Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வறட்சியால் விவசாயிகள் பெரும் பாதிப்பு

T

The Leader Desk

ஆகஸ்ட் 24, 2023 • 1:46 AM

வறட்சியால் விவசாயிகள் பெரும் பாதிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ,055.19 ஏக்கராக அதிகரித்துள்ளது.
  • ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு 424.70 ஏக்கர் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.
  • இதன்படி, நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு 51,479.89 ஏக்கர் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
  • மேற்படி சபையினால் நேற்று (22) வரை தயாரிக்கப்பட்ட பயிர் சேத மதிப்பீடுகளின் படி தயாரிக்கப்பட்ட தினசரி அறிக்கை இன்று (23) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

51,055.19 ஏக்கராக அதிகரித்துள்ளது.

ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு 424.70 ஏக்கர் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு 51,479.89 ஏக்கர் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்படி சபையினால் நேற்று (22) வரை தயாரிக்கப்பட்ட பயிர் சேத மதிப்பீடுகளின் படி தயாரிக்கப்பட்ட தினசரி அறிக்கை இன்று (23) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ், நெல் பயிர்ச்செய்கை செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 45,678 ஆகவும், இதர பயிர்கள் சேதம் அடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 394 ஆகவும் உள்ளது.

நெல் மற்றும் இதர பயிர்கள் சேதமடைந்த மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 46,072 ஆகும்.

நேற்றைய நிலவரப்படி குருநாகல் மாவட்டத்தில் அதிகளவு பயிர் சேதம் பதிவாகியுள்ளதுமன் அதன் அளவு 24,647.92 ஏக்கர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 29,472 ஆகும்.

இரண்டாவதாக 14,067 ஏக்கர் பரப்பளான பயிர்ச்சேதம் உடவளையில் பதிவாகியுள்ளதுடன் அங்கு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 5867 ஆகும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1898.25   ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 1787  விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் 699.75 ஏக்கர் நெற்செய்கை சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 320 ஆகும். 

அநுராதபுரம் மாவட்டத்தில் 336.20 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்ததுடன் 292 விவசாயிகள் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வரட்சி காரணமாக எதிர்காலத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கும் வகையில் அமைச்சரவை குறிப்பொன்றை தயாரிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...