Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தேசிய கீதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 23, 2023 • 6:39 AM

தேசிய கீதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை தவறான முறையில் பாடியுள்ளாரா என ஆராய உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • இந்த நாட்டில் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் இருந்தாலும், தேசிய கீதம் இடைப்பட்ட சுருதியில் பாடப்பட வேண்டும் என்று மட்டுமே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
  • உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் விசாரணை அதிகாரி ஒருவரும் இந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்டதுடன், அவர்கள் இது தொடர்பாக பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
எழுத்து அளவு:

பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை தவறான முறையில் பாடியுள்ளாரா என ஆராய உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் விசாரணை அதிகாரி ஒருவரும் இந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்டதுடன், அவர்கள் இது தொடர்பாக பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இதன்படி, தேசிய கீதத்தை எவ்வாறு பாடுவது என்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் இருந்தாலும், தேசிய கீதம் இடைப்பட்ட சுருதியில் பாடப்பட வேண்டும் என்று மட்டுமே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

எவ்வாறாயினும், உமாரா சின்ஹவன்ச தேசிய கீதத்தை அதிக சுருதியில் பாடியுள்ளதாக குழு கண்டறிந்துள்ளதுடன், அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

விசாரணைக் குழு இது தொடர்பான அறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் அண்மையில் கையளித்துள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...