Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 23, 2023 • 6:39 AM

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (22.08) முன்னெடுக்கப்பட்டது.
  • இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர்.
  • இவரது இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று நேற்று (22.08) பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

நேற்று (22.08) முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர்.

இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதனால் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். 

அங்கு நின்றவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் வழங்கியதையடுத்து, படுகாயமடைந்த குடும்பஸ்தரின் தாயார் வருகை தந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்தார்.

இச் சம்பவத்தில், வவுனியா, மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன் (தீபன்) என்பவரே உயிரிழந்தவராவார்.  இவரது இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று நேற்று (22.08) பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது, சடலத்தை எடுத்து வந்த அக் கிராம மக்களும், கிராம பொது அமைப்புக்களும் சடலத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், இறந்தாவருக்கு நீதி கோரியும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'ஐஸ் - கஞ்சா-  மாபா- ஹெரோயின் - போதை மாத்திரை என்பவற்றை தடை செய், தொடர்ச்சியாக அடாவடித்தனம் செய்வோரை கைது செய், மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை தடை செய்' என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...