Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இதய நோயாளிகள் அதிகரிப்பிற்கான பிரதான காரணம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2023 • 3:18 PM

இதய நோயாளிகள் அதிகரிப்பிற்கான பிரதான காரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
  • நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • "கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இதய நோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
  • நாளொன்றுக்கு சுமார் 166-170 பேர் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள்.
எழுத்து அளவு:

வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் கலாநிதி கோட்டாபய ரணசிங்க இதனை தெரிவித்தார்.


"கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இதய நோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 166-170 பேர் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். தற்போதைய தரவுகள் அதைத்தான் நமக்குக் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.. நாம் நோயாளிகளை அன்றாடம் பரிசோதிக்கும் போது மேல் மாகாணத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகளும் கிடைத்து வருவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அந்த தரவுகளை பார்க்கும் போது கடந்த சில வருடங்களில் இதய நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணலாம். 

இதய நோயாளிகளின் அதிகரிப்புக்கு உணவுப் பழக்கத்தில் உள்ள குறைபாடுகளே பிரதான காரணம் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

"நமது வாழ்க்கை முறையால் மாரடைப்பு அதிகரித்துள்ளது. நமது வாழ்க்கை முறையின் மாற்றத்தால். குறிப்பாக நாம் உண்ணும் உணவில். உணவில் பெரிய மாற்றம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவை வேகமாக மாறிவிட்டன. நாம் உண்ணும் மற்றும் குடிக்கும் முறை, நமது வாழ்க்கை முறை மிகவும் மாறிவிட்டது.உண்மையில் இலங்கையில் மாரடைப்பு அதிகரிப்பதற்கு இந்த வித்தியாசமே காரணம். குறிப்பாக நாம் உண்ணும் உணவில் உள்ள சீனியின் அளவு மிக அதிகமாக உள்ளது. இலங்கையில் ஒருவர் வருடத்திற்கு சுமார் 30 கிலோ சீனியை உட்கொள்கிறார். . மற்றொன்று, நம் உணவின் பெரும்பகுதிக்கு எண்ணெயைப் பயன்படுத்துகிறோம். உண்ணப்படும் பெரும்பாலான உணவுகள் கார்போஹைட்ரேட் ஆகும், அதாவது உணவு முக்கிய காரணியாகும்."

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...