Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ரத்வத்த சம்பவம் - அமைச்சர்களை சாடும் சஜித்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2023 • 3:16 PM

ரத்வத்த சம்பவம் - அமைச்சர்களை சாடும் சஜித்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • மாத்தளை எல்கடுவ ரத்வத்த கீழ் பகுதியில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தோட்ட உதவி முகாமையாளரால் கடந்த 19 ஆம் திகதி வெளியேற்றப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • நாட்டில் உள்ள பெருந்தோட்ட சமூகத்தை அரசாங்கம் எவ்வாறு நடத்துகிறது என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும், தோட்ட மக்களுக்கு நீதி வழங்குவதில் அரசாங்கம் வெற்றிகாணவில்லை என்றும் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாத்தளை எல்கடுவ ரத்வத்த கீழ் பகுதியில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தோட்ட உதவி முகாமையாளரால் கடந்த 19 ஆம் திகதி வெளியேற்றப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்காலிகமாக அவர்களுக்கு தங்க அனுமதிக்கப்பட்டிருந்த குடியிருப்புகளும் நாசமாக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,சம்பவத்திற்கு அமைச்சரே பொறுப்புக் கூற வேண்டும் என்றும், அமைச்சர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று செயற்பட்டும் பயனில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பெருந்தோட்ட சமூகத்தை அரசாங்கம் எவ்வாறு நடத்துகிறது என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும், தோட்ட மக்களுக்கு நீதி வழங்குவதில் அரசாங்கம் வெற்றிகாணவில்லை என்றும் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெருந்தோட்ட சமூகத்தினரின் கடின உழைப்பினால் நாட்டுக்கு டொலர்கள் கிடைப்பதாகவும், அம்மக்களின் சுகாதார மற்றும் கல்விப் பிரச்சினைகள் பல இருப்பதாகவும், தோட்ட மக்களின் வாக்குகளைப் பெறும்போது அரசாங்க அமைச்சர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும், மலையக பெருந்தோட்ட சமூகம் அனைத்து தரப்பிலிருந்தும் குறைந்த கரிசனைகளே பெற்று வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

பெருந்தோட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத காரணத்தினாலேயே மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு இதை கொண்டு வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...