Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பாகிஸ்தானில் சிறுவர்களுடன் அந்தரத்தில் தொங்கும் கேபிள் கார்

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2023 • 3:13 PM

பாகிஸ்தானில் சிறுவர்களுடன் அந்தரத்தில் தொங்கும் கேபிள் கார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும்.
  • அந்த வகையில், இன்று காலை 07:00 மணியளவில் ஆறு குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் என மொத்தம் எட்டு பேர் ஒரு கேபிள் காரில் பயணித்தனர்.
  • தரையில் இருந்து சுமார் 1200 அடிக்கு மேலே அது செல்லும் போது கயிறு திடீரென அறுந்தது.
  • உள்ளே எட்டு பேர் இருக்கிறோம்.
எழுத்து அளவு:

நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும்.

இங்குள்ள பள்ளத்தாக்குகளை கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில், இன்று காலை 07:00 மணியளவில் ஆறு குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் என மொத்தம் எட்டு பேர் ஒரு கேபிள் காரில் பயணித்தனர். தரையில் இருந்து சுமார் 1200 அடிக்கு மேலே அது செல்லும் போது கயிறு திடீரென அறுந்தது. இதனையடுத்து இந்த கார் அதில் உள்ள பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது.

"எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள். உள்ளே எட்டு பேர் இருக்கிறோம். நாங்கள் அந்தரத்தில் கடந்த ஐந்து மணி நேரமாக தொங்குகிறோம். ஒரு ஆண் மயக்கமடைந்து விட்டார். ஒரு ராணுவ ஹெலிகாப்டர் வந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பி சென்று விட்டது," என்று உள்ளே சிக்கி கொண்டுள்ள பயணிகளில் ஒருவரான குல்ஃப்ராஸ் அங்குள்ள நிலவரம் குறித்து செல்போனில் தெரிவித்தார்.

"கேபிள் கார் தரையிலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் தொங்குவதால், ஹெலிகாப்டர் உதவியால்தான் மீட்பு நடவடிக்கையை செயல்படுத்த முடியும்," என்று கைபர் பகுதியின் மூத்த அதிகாரி சையத் ஹம்மட் ஹைதர் தெரிவித்தார்.

தற்போது வரை பயணிகள் இன்னமும் காப்பாற்றப்படவில்லை. ஆறு குழந்தைகள் சிக்கி கொண்டுள்ளதால் இச்சம்பவம் குறித்த செய்தி வெளியானது முதல் எப்படியாவது, அரசு அவர்களை காப்பாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் அனைவரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...