Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ரயிலில் தவறவிடப்பட்ட லட்சக்கணக்கான பொருட்கள்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 21, 2023 • 11:22 AM

ரயிலில் தவறவிடப்பட்ட லட்சக்கணக்கான பொருட்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட நகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
  • கோட்டைக்கு வந்த ரயிலை மாளிகாவத்தை தரிப்பிடத்தில் இடுவதற்கு முன்னர் அதனை சோதனையிட்ட போதே பயணப்பையை பாதுகாப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.
  • அந்த பையில், 3 பவுன் தங்க மாலை , பிரேஸ்லெட், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன், 35 லட்சம் ரூபாய் சேமிப்பு சான்றிதழ், வங்கி புத்தகங்கள், கார் உரிமம் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.
எழுத்து அளவு:

50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட நகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கண்டி, கட்டுகஸ்தோட்டை குஹாகொட பகுதியைச் சேர்ந்த லக்சிறி சம்பத் மற்றும் அவரது மனைவி ஹிருணி நிமாஷா ஆகியோரே ரயிலில் இந்த பையை மறந்து சென்றுள்ளனர்.

ஹிருணியின் கிராமம் மாத்தறை பகுதியில் உள்ளதால், தம்பதியினர் கண்டியிலிருந்து அவரது வீட்டிற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் கண்டிக்கு இந்த ரயிலில் பயணித்துள்ளனர்.

இந்த பயணத்தில் மனைவியின் தாய் தந்தையும் இருந்துள்ளனர்.

ரயிலில் அமர்ந்திருந்த போது அவர்களது பயணப் பைகள் சில இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டு கோட்டையிலிருந்து இறங்கும் போது பையை எடுக்க மறந்து விட்டனர்.

கோட்டைக்கு வந்த ரயிலை மாளிகாவத்தை தரிப்பிடத்தில் இடுவதற்கு முன்னர் அதனை சோதனையிட்ட போதே  பயணப்பையை பாதுகாப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.

பின்னர் அதனை மாளிகாவத்தை ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அந்த பையில், 3 பவுன் தங்க மாலை , பிரேஸ்லெட், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன், 35 லட்சம் ரூபாய் சேமிப்பு சான்றிதழ், வங்கி புத்தகங்கள், கார் உரிமம் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.

ரயில் பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்னவின் பணிப்புரையின் பேரில் உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் காமினி திஸாநாயக்கவின் தலையீட்டில் இந்த பையின் உரிமையாளரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கமைவாக அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒலிபெருக்கி மூலம் செய்தி வழங்கப்பட்டது.

இதற்கிடையில், பையில் இருந்த வங்கிப் புத்தகத்தின் முகவரியைக் வைத்து உதவிப் பாதுகாப்பு அதிகாரி சுமித் ஊடாக மாத்தறை பலடுவ பிரதேசத்திலுள்ள முகவரி கண்டுபிடிக்கப்பட்டு தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை உரியவர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...