Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கொடுத்த கடனை கேட்க சென்றவர் குத்திக் கொலை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 20, 2023 • 3:06 AM

கொடுத்த கடனை கேட்க சென்றவர் குத்திக் கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடனை மீள பெற வந்த இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
  • மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் நேற்று (19) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • உயிரிழந்தவர் தலகல, கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் எனவும், உயிரிழந்தவர் நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • இருவரும் வந்து கடனாளியின் வீட்டின் மூடியிருந்த கேட்டை திறக்க முற்பட்டதுடன், அப்போது கடன் வாங்கிய வீட்டின் உரிமையாளர் கூரிய ஆயுதம் ஒன்றை கொண்டு வந்து இருவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

கடனை மீள பெற வந்த இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் நேற்று (19) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தலகல, கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் எனவும், உயிரிழந்தவர் நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர் கடன் தொகையை வசூலிப்பதற்காக மற்றொரு நபருடன் முச்சக்கர வண்டியில் கடனாளியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இருவரும் வந்து கடனாளியின் வீட்டின் மூடியிருந்த கேட்டை திறக்க முற்பட்டதுடன், அப்போது கடன் வாங்கிய வீட்டின் உரிமையாளர் கூரிய ஆயுதம் ஒன்றை கொண்டு வந்து இருவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பின்னர் காயமடைந்த இருவரும் தாங்கள் வந்த அதே முச்சக்கரவண்டியில் ஹோமாகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை பெற்றுக் கொள்ள உயிரிழந்தவர் வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த 60 வயதுடைய சந்தேக நபர் ஹோகந்தர பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...