Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை? - மனு கையளிப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 15, 2023 • 10:54 AM

ஞாயிற்றுக்கிழமை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை? - மனு கையளிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரத்தியோக வகுப்புகள் நடாத்துவதை தடை செய்யக் கோரி திணைக்கள அதிகாரிகளிடம் மனுக்கள் கையளிக்கப்படுள்ளன.
  • நாங்கள் தங்களுடைய மதிப்பிற்குரிய கவனத்திற் கொண்டு தரப்படும் மனுவானது எமது பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வகுப்புக்களில் தடை விதிக்குமாறு கூறி வந்துள்ளோம்.
  • குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஞாயிற்றுக் கிழமையில் நடைபெறும் வகுப்பிற்கு தடை கோரி மனு கோரல் எங்களுடைய வாழைச்சேனை பிரதேசத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் மற்றும் பொது வகுப்புக்கள் நடைபெறுவது வழக்கம்.
எழுத்து அளவு:

பிரத்தியோக வகுப்புகள் நடாத்துவதை தடை செய்யக் கோரி திணைக்கள அதிகாரிகளிடம் மனுக்கள் கையளிக்கப்படுள்ளன.

வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள 200 சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களினால் கையொப்பம் இடப்பட்ட மனுக்கள் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர்  ரி.அனந்தரூபன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் தயாநந்தி திருச்செல்வம், வாழைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்
 அமலினி, வாழைச்சேனை பிரதேச சபை உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.வசந்தராஜா ஆகிய அதிகாரிகளிடம்  கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜர் வழங்கும் நிகழ்வில் வாழைச்சேனை வேல்ட் விஷன் முகாமையாளர் அந்தோனிப்பிள்ளை ரவீந்திரன்,  வாழைச்சேனை வேல்ட் விஷன் அபிவிருத்தி இலகுபடுத்தினர்  கரோலினா றாகல் மற்றும் தொழில்முறை உளவியல் ஆலோசனை மையம் திறன் அபிவிருத்தி  இலகுபடுத்தினர் மரியதாசன் சூசைதாசன் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஞாயிற்றுக் கிழமையில் நடைபெறும் வகுப்பிற்கு தடை கோரி மனு கோரல்

எங்களுடைய வாழைச்சேனை பிரதேசத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் மற்றும் பொது வகுப்புக்கள் நடைபெறுவது வழக்கம். நாங்கள் தங்களுடைய மதிப்பிற்குரிய கவனத்திற் கொண்டு தரப்படும் மனுவானது எமது பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வகுப்புக்களில் தடை விதிக்குமாறு கூறி வந்துள்ளோம்.

எம்மால் கொடுக்கப்படும் காரணமாவது ஞாயிறு தினங்களில் மறைக்கல்வி வகுப்பு, அறநெறி வகுப்பு மற்றும் சமயம் சார்ந்த செயற்பாடுகள் காலை வேளையில் நடைபெறுவதும் மற்றும் மிகுதியான நேரங்களில் அன்றைய நாளின் பொழுதை பிள்ளைகள் பெற்றோருடன் குதூகலமாக களிப்பதும் மற்றும் குடும்ப ஒற்றுமையை வளப்படுத்துவதும் ஆகும்.

 ஆகவே இதனை கருத்திற் கொண்டு மேற்கூறப்பட்ட வேண்டுகோளுக்கமைய வகுப்புகளை ஞாயிறு தினங்களில் தடை செய்வதற்கு பெற்றோருடன் பிள்ளைகள் இணைந்து இந்த மனுவை கையளிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...