Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சுங்கத்தில் இருக்கும் வாகனங்களை விடுவித்துக் கொள்ள அனுமதி!

T

The Leader Desk

ஆகஸ்ட் 15, 2023 • 10:54 AM

சுங்கத்தில் இருக்கும் வாகனங்களை விடுவித்துக் கொள்ள அனுமதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் கீழ் தடை காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
  • சுங்கப் பத்திரம் வழங்கப்படாத வாகனங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவித்ததன் பின்னர் CIF பெறுமதியில் 30% வரி செலுத்தி விடுவிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள், விசேட தேவைகளுக்காக மற்றும் பொருள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள் மற்றும் ட்ரக் வாகன இறக்குமதிக்கு நேற்று (14) நள்ளிரவு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் கீழ் தடை காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  

சுங்கப் பத்திரம் வழங்கப்படாத வாகனங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவித்ததன் பின்னர் CIF பெறுமதியில் 30% வரி செலுத்தி விடுவிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள்,  விசேட தேவைகளுக்காக மற்றும் பொருள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள் மற்றும் ட்ரக் வாகன இறக்குமதிக்கு நேற்று (14) நள்ளிரவு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குப்பைகளை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் லொறிகள் மற்றும்  தீயணைப்பு வாகனங்கள் போன்ற விசேட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களும் இதன் கீழ் அனுமதிக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பஸ்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பதன் மூலம் பயணிகள் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதுடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...