Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு குறித்து விசேட அறிவிப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 15, 2023 • 3:13 AM

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு குறித்து விசேட அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • முன்னதாக, அந்த இயந்திரம் உட்பட 03 ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலம் வெளிநாடு செல்லும் பயணிகளின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் பாரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இதேவேளை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 446 கெமராக்களில் இருந்து பெறப்படும் படங்கள் அடங்கிய பாதுகாப்பு CCTV கெமரா அமைப்புடன் கூடிய குழு ஒன்றின் ஊடாக பயணிகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
எழுத்து அளவு:

நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் இருந்த ஸ்கேனிங் இயந்திரத்தை அகற்ற தீர்மானித்துள்ளதாக அந் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், ஒவ்வொரு பயணியும் விமானத்தில் ஏறுவதற்கு முன் இரண்டு இடங்களில் சிறப்பு ஸ்கேன் இயந்திரத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அப்போது காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அகற்றப்பட்ட ஸ்கேனிங் இயந்திரம் நிறுவப்பட்டதாக  அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த இயந்திரம் உட்பட 03 ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலம் வெளிநாடு செல்லும் பயணிகளின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் பாரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு  இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 446 கெமராக்களில் இருந்து பெறப்படும் படங்கள் அடங்கிய பாதுகாப்பு CCTV  கெமரா அமைப்புடன் கூடிய குழு ஒன்றின் ஊடாக பயணிகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

சிவில் உடையில் விமான நிலையம் மற்றும் முப்படை வீரர்கள் அடங்கிய பாதுகாப்புக் குழுவும் புறப்படும் மற்றும் வருகை தரும் முனையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...