Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை

T

The Leader Desk

ஆகஸ்ட் 14, 2023 • 11:37 AM

ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொல்லப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • தொடங்கொடை, தொலேலந்த பிரதேசத்தில் வசித்து வந்த 37 வயதுடைய திமுத் சாமிக்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் முன் மற்றும் பின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த கொலையாளிகள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எழுத்து அளவு:

கொல்லப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொடங்கொடை, தொலேலந்த பிரதேசத்தில் வசித்து வந்த 37 வயதுடைய திமுத் சாமிக்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் வீடு திருத்தப்பட்டு வரும் நிலையில், மனைவி மற்றும் குழந்தையுடன் மனைவி வீட்டில் தங்கியிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் முன் மற்றும் பின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த கொலையாளிகள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் தனியார் வாகனம் ஒன்றில் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்டவரும் சந்தேகநபர்களும் மத்துகம பிரதேசத்தில் உள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் நெருங்கி பழகியதாகவும், பின்னர் ஒரு வருடமாக பகை இருந்ததாகவும், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் வீட்டிற்கு கடந்த மாதத்திற்கு முன்னர் குழுவினருடன் சென்று கொலை செய்யப்பட்டவர், அவரை தாக்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...