Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஏற்றுமதி வருமானத்தை மேம்படுத்த நடவடிக்கை

T

The Leader Desk

ஆகஸ்ட் 13, 2023 • 5:02 PM

ஏற்றுமதி வருமானத்தை மேம்படுத்த நடவடிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
  • இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை பாதிக்கும் வரிகள் மற்றும் ஏற்றுமதி, மீள்ஏற்றுமதி செயன்முறைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இத்துறையில் இதுவரை ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் உரிய தரப்பினர் ஜனாதிபதியிடம் தகவல்களை முன்வைத்தனர்.
  • இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில் துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில் துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் அபிவிருத்திக்கான வரிக் கொள்கைகள் தொடர்பான பரிந்துரைகளும் "சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக் குழு" வினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை பாதிக்கும் வரிகள் மற்றும் ஏற்றுமதி, மீள்ஏற்றுமதி செயன்முறைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இத்துறையில் இதுவரை ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் உரிய தரப்பினர் ஜனாதிபதியிடம் தகவல்களை முன்வைத்தனர்.

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையவில்லை என்றும், வருடாந்தம் குறைந்தது 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காகக் கொள்ள திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழிலை மேம்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் உடனடியாக முன்வைக்கப்பட்டால் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் உட்பட துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...