Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

யாழில் மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர்! இறுதியில் நேர்ந்த சோகம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2023 • 12:28 AM

யாழில் மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர்! இறுதியில் நேர்ந்த சோகம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாழ்ப்பாண பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் ஒருவர் அறைந்ததில் மாணவன் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • வலிகாமம் - சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6 ல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவனுக்கு பாடசாலை ஆசிரியர் கடந்த 31 ஆம் திகதி பாடசாலையில் வைத்து தாக்கியுள்ளார்.
  • இதனையடுத்து, நடந்த சம்பவத்தை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
எழுத்து அளவு:

யாழ்ப்பாண பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் ஒருவர் அறைந்ததில் மாணவன் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் - சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6 ல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர்! இறுதியில் நேர்ந்த சோகம் | Teacher Slapped A Student On The Cheek In Jaffna

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவனுக்கு பாடசாலை ஆசிரியர் கடந்த 31 ஆம் திகதி பாடசாலையில் வைத்து தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் மாணவனுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காதினால் நீர் வடிந்ததை அவதானித்த பெற்றோர் மாணவனை விசாரித்துள்ளனர்.

யாழில் மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர்! இறுதியில் நேர்ந்த சோகம் | Teacher Slapped A Student On The Cheek In Jaffna

இதனையடுத்து, நடந்த சம்பவத்தை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாணவனை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மாணவரின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியமையை உறுதி செய்துள்ளனர்.

அந்தவகையில் வைத்தியசாலை பிரிவு பொலிஸார் இது தொடர்பில் மாணவனிடம் வாக்குமூலம் பெற்று அதனை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

யாழில் மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர்! இறுதியில் நேர்ந்த சோகம் | Teacher Slapped A Student On The Cheek In Jaffna

பாடசாலை நிர்வாகத்தினர் குறித்த விடயத்தினை வெளியே கசிய விடாமல் மூடி மறைக்க முயற்சிப்பதாக அறியமுடிகிறது.

மேலும் மாணவர்களை ஆசிரியர் தாக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து உள்ள நிலையில் வடமாகாண கல்வி அமைச்சு இதுவரை குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு நிர்வாக ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததாக தெரியவரவில்லை.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...